Featured Post

SSLC RESULT | www.dge1.tn.nic.in

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு


மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு | தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு | மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 20 ஆயிரம் டாக்டர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியான பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments