Featured Post

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு


சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பரில் நடந்த இளங்கலை, முதுகலை படிப்புகள், தொழில்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் 31-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். http://results.unom.ac.in/, www.ideunom.ac.in, www.egovernance.unom.ac.in மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  DOWNLOAD

Comments