Featured Post

பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.


மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள். தீவிரம் அக மதிப்பெண் ஆன்லைனில் பதிவேற்றப்படும் | பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பாடவாரியான மாதிரி வினாத்தாள்கள் முன்கூட்டியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன. அரையாண்டுத் தேர்வை தொடர்ந்து, முதலாவது திருப்புதல் தேர்வு முடிவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் 2-வது திருப்புதல் தேர்வுகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 'தியரி' எனப்படும் கருத்தியல் தேர்வுக்கு 70 மதிப்பெண். செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண். இந்த 30-ல் 20 புற மதிப்பெண் ஆகும். எஞ்சிய 10 அக மதிப்பெண். இந்த அக மதிப்பெண்ணில் செயல்திட்டம் (புராஜெக்ட்), வருகைப்பதிவு, களஆய்வு என பாடங்களுக்கு தக்க வாறு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி தொடங்கிய நாள் முதல் 2018 ஜனவரி 31 வரையிலான காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த நாட்களைக் கணக்கிட்டு, வருகைப் பதிவுக்கான மதிப்பெண்ணை வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அக மதிப்பெண்ணை மார்ச் 13 முதல் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் மார்ச் 26-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments