ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு


ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு | இளம் நிர்வாக நிலையில் இருந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேர்வுநிலை அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  வெளியிட்ட அறிவிப்பு: விடுப்பில் உள்ள எஸ்.நாகராஜன், மாநில கிராம சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, மத்திய அரசுப் பணியில் உள்ள ஆஷிஷ்குமார், வணிகவரி இணை ஆணையர்கள் எம்.பாலாஜி, பி.மகேஸ்வரி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் வி.சம்பத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், சமூக நல இயக்குநர் வி.அமுதவல்லி, திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, சிஎம்டிஏ தமைமை செயல் அதிகாரி எம்.மதிவாணன் ஆகிய 2005-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுதுபொருள் அச்சகத் துறை இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.பாஸ்கரன், பெரம்பலூர் ஆட்சியர் வி.சாந்தா, வேளாண் துறை இணை செயலாளர் எம்.கருணாகரன், காதி கிராமத்துறை தலைமை செயல் அதிகாரி எஸ்.நடராஜன், மருத்துவ சேவை தேர்வு வாரிய தலைவர் வி.ராஜாராமன் ஆகியோருக்கும், சேமிப்புக் கிடங்குகள் மேலாண் இயக்குநர் கே.நடராஜன், நில அளவை இயக்குநர் ஆர்.செல்வராஜ், உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் லில்லி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிர மணியன் ஆகியோருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர்கள் இவர்களில், வணிகவரி இணை ஆணையர்களாக உள்ள எம்.பாலாஜி, பி.மகேஸ் வரி ஆகியோர் கூடுதல் ஆணையர்களாகவும், வேளாண் துறை இணைச் செயலாளர் கருணாகரன், உயர்கல்வித் துறை இணை செயலாளர் ஆர்.லில்லி ஆகியோர் அதே துறைகளில் கூடுதல் செயலர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments