Featured Post

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது


திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் திடீர் உத்தரவால் 5 ஆயிரம் மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இருந்து மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இஉள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்காக www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) உத்தரவின்படி சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் என்ஐஓஎஸ் மற்றும் மாநில அரசுகளின் திறந்தநிலை கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் மருத்துவக் கனவோடு பிளஸ் 2 படிக்கும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் டாக்டராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடி யாக பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்தில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதால், பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், திறந்தநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

Comments