Featured Post

குரூப்-4 ஆங்கில வினாத்தாளில் தவறான பதில்களால் தேர்வர்கள் குழப்பம் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்



குரூப்-4 ஆங்கில வினாத்தாளில் தவறான பதில்களால் தேர்வர்கள் குழப்பம் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் | குரூப்-4 தேர்வு ஆங்கில வினாத்தாளில், தேசிய கீதம் எழுதிய ரவீந்திர நாத் தாகூர் எப்போது பிறந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சரியானவற்றை குறிப்பிடும்படி 4 பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதில் (ஏ) 18 மே 1861, (பி) 17 மே 1861, (சி) 17 மே 1816, (டி) 17 ஜூன் 1861 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ரவீந்திர நாத் தாகூர் 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பிறந்தார் என்பது வரலாறு ஆகும். எனவே 4 பதில்களும் தவறாக இருந்ததால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். எனவே தவறான பதில்கள் இடம் பெற்றுள்ள வினாவுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறும்போது, 'டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளில் வினா-விடை தவறாக இடம் பெற்றிருந்தால், உத்தேசமான வினா-விடைகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியான 7 நாட்களில் தேர்வர்கள் முறையிடலாம் என்பது விதி ஆகும். அதனடிப் படையில் தகுந்த மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்' என்றார். DOWNLOAD

Comments