Featured Post

சென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய ‘ஆன்-லைன்’ படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்


சென்னை பல்கலைக்கழகத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகம் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் | சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு முதல் 4 புதிய ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சிண்டிகேட் கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வியியல் இயக்குனர் மஞ்சுளா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் உள்பட சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் தகவல் கடந்த ஆண்டு நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தின் போது, சென்னை பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வி ஆண்டு முதல் 'ஆன்-லைன்' படிப்பை அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நடந்த கூட்டத்தில் 4 புதிய 'ஆன்-லைன்' படிப்பை வருகிற கல்வி ஆண்டில் (2018-19) அறிமுகம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகம் NA-AC, A+ (தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்) சான்றிதழ் பெற்றிருப்பதால் 'ஆன்-லைன்' படிப்பை தொடங்குவதற்கு அனுமதி உண்டு. எனவே இந்த கல்வி ஆண்டு எம்.எஸ்.சி.(ஸ்பேஷியல் டெக்னாலஜி), எம்.எஸ்.சி. (இணைய தடயவியல்), எம்.ஏ. (மகளிர் கல்வி), எம்.சி.ஏ. ஆகிய 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. மானியக்குழுவுக்கு பரிந்துரை இந்த ஒப்புதல் கடிதம் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்படும். பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியவுடன் சென்னை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு 4 புதிய 'ஆன்-லைன்' படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். மதியம் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை நடந்தது. 27 சிண்டிகேட் உறுப்பினர்களில் 21 பேர் பங்கேற்றதாகவும், 6 பேர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.  DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

Comments