ஜியோமி எல்இடி டிவி, நோட் 5 அறிமுகம்..22-ம் தேதி முதல் பிளிப்கார்ட்-ல் கிடைக்கும்


ஜியோமி எல்இடி டிவி, நோட் 5 அறிமுகம் | புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் புதிய எல்இடி டிவியை அறிமுகம் செய்யும் ஜியோமி நிறுவனத்தின் நிறுவனர் வாங் சான் சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம் எல்இடி டிவி மற்றும் நோட் 5, நோட் 5 புரோ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சீனாவுக்கு அடுத்து எல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. குறுகிய காலத்தில் இந்தியாவின் முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறினோம். ஸ்மார்ட் போனுக்கு அடுத்து டிவி மிகப்பெரிய சந்தையாகும். சீனாவில் முன்னணி டிவி நிறுவனமாக இருக்கிறோம். இந்திய சந்தைக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்திருக்கிறோம் என ஜியோமி இந்தியாவின் தலைவர் மனு ஜெயின் கூறினார். மேலும் இப்போதைக்கு டிவியை இறக்குமதி செய்கிறோம். அதிக எண்ணிக்கையில் விற்கும் பட்சத்தில் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் போன் சந்தை இருந்ததை போல தற்போது டிவி சந்தை இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டிவிகளில் 10 சதவீதம் ஆன்லைன் மூலம் விற்பனையாகின்றன. நிறுவனத்தின் எல்இடி டிவி வரும் 22-ம் தேதி முதல் பிளிப்கார்ட், மி டாட் காம் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் என்று கூறினார். நோட் 5 விலை ரூ.9,999 முதல் தொடங்கும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Comments