Featured Post

மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்.


மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் தரும் அறிவிப்பு வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் | மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ரூ.2½ லட்சம் என்ற தற்போதைய அளவே தொடரும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வருமான வரி விலக்கு நாடு முழுவதும் மத்திய பட்ஜெட்டை மாத சம்பளதாரர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என காத்திருந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதைய அளவான ரூ.2½ லட்சம் என்பதே தொடரும். 'ஸ்லாப்' மாற்றம் இல்லை இதே போன்று வருமான வரி செலுத்துவதற்கான அடுக்கிலும் (ஸ்லாப்) மாற்றம் செய்யப்படவில்லை. எனவே ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறுகிறவர்கள் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்தை கொண்டவர்கள் 30 சதவீதமும் வருமான வரி செலுத்துவது தொடரும். நிலையான கழிவு ரூ.40 ஆயிரம் அதே நேரத்தில் மாத சம்பளதாரர்களுக்கு தற்போது அனுமதிக்கப்படுகிற போக்குவரத்து அலவன்சு கழிவும், பலவகை மருத்துவ செலவினை நிறுவனத்திடம் திரும்ப பெறுவதில் அளிக்கப்படுகிற கழிவும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக நிலையான கழிவாக ரூ.40 ஆயிரம் அனுமதிக்கப்படும். இதன்மூலம் 2½ கோடி மாத சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் உள்ளவர்களுக்கு கூடுதல் மிகை வரியாக (அடிஷனல் சர்சார்ஜ்) 10 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 15 சதவீதமும் விதிப்பது தொடரும். 3 சதவீதம் கல்வி வரி 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் * மூத்த குடிமக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் பெறுகிற வட்டி வருவாயில் ரூ.10 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வந்த வரிச்சலுகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு பிரிவு 194-ஏ யின் கீழ் வரிக்கழிவு ஆதாரம் தேவையில்லை. இது நிரந்தர வைப்பு, மாதாந்திர தொடர் வைப்புக்கும் பொருந்தும். * மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வகையில் பிரிவு 80-டியின் கீழ் அளிக்கப்பட்டு வந்த வரிக்கழிவு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. * பிரிவு 80 டி.டி.பி.யின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தீவிர நோய் செலவின கழிவாக ரூ.60 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. மிக மூத்த குடிமக்களுக்கு ரூ.80 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. இப்போது இவ்விரண்டுமே ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. * 60 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தன யோஜனா (காப்பீட்டு திட்டம்) மார்ச், 2020 வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் தற்போதைய முதலீட்டு அளவு ரூ.7½ லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் விவரம் 2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை 1 கோடியே 89 லட்சம் மாத சம்பளதாரர்கள் தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தி உள்ளனர். இதன் தனிநபர் சராசரி ரூ.76 ஆயிரத்து 306 ஆகும். 1 கோடியே 88 லட்சம் தொழில் அதிபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். அவர்கள் ரூ.48 ஆயிரம் கோடி வருமான வரி செலுத்தி உள்ளனர். இதன் தனிநபர் சராசரி ரூ.25 ஆயிரத்து 753 ஆகும். பிற முக்கிய தகவல்கள் * பங்குச்சந்தையில் நீண்டகால மூலதனத்திற்கான ஆதாயம் ரூ.1 லட்சத்தை தாண்டினால், அதற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். * ஒரு வருடத்துக்கு பிறகு பங்கு விற்பனை மூலம் கிடைக் கிற ஆதாயத்துக்கு, மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். * 5 ஆண்டு காலத்துக்கு நிலையாக முதலீடு செய்யப் படுகிற பங்குகளுக்கு வரி விலக்கு.

Comments