Featured Post

SSLC RESULT | www.dge1.tn.nic.in

TNPSC CSSE 4 2018 | 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கும் TNPSC 'குரூப் – 4' தேர்வு. பிப்ரவரி 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது.


TNPSC CSSE 4 2018 | 11ம் தேதி,TNPSC 'குரூப் – 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் – 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, குரூப் – 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் – 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது. தேர்வாணைய வரலாற்றிலேயே, இதர பிற தேர்வாணையங்கள் / தேர்வு அமைப்புகளை ஒப்பிடும்போது, மிக அதிக அளவான 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கும் மற்றும் 1.25 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பங்களிப்பால் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய நிகழ்வாக இத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (494), இளநிலை உதவியாளர் (பிணையற்றது) – (4096), இளநிலை உதவியாளர் (பிணையம்) – (205) ; வரித்தண்டலர் நிலை- I – (48) ; நில அளவர் – (74) ; வரைவாளர் – (156); தட்டச்சர் – (3463); சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III – (815) என மொத்தம் 9351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 4 (தொகுதி – 4 தேர்வு) வரும் 11.02.2018 முற்பகல் நடைபெறவுள்ளது. முக்கிய அறிவுரைகள்: விண்ணப்பதாரர்கள், அகவி (Pager), செல்லிடப்பேசி (Mobile Phone), கணிப்புக்கருவி (Calculator), நினைவகக் குறிப்பு (Memory Notes) மற்றும் புத்தகங்கள் (Books) அல்லது மின்னனு சாதனமோ (Electronic Device), பதிவு செய்யும் உபகரணங்கள் (Recording Device) ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ தேர்வுக்கூட்த்திற்குள் எடுத்துவர முற்றிலும் அனுமதியில்லை. மேற்படி பொருட்கள் / உபகரணங்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாட்கள் செல்லாததாக்கப்படும் மற்றும் / அல்லது அவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் அவர்கள் முழுமையான உடற்பரிக்சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்லாமல் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்களின் விவரங்களடங்கிய தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதத் துவங்கும் முன் விடைத்தாளில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினில் உள்ளதுபோல் சரியாக உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.  DOWNLOAD

Comments