Featured Post

சட்டப் பேரவையில் 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்


சட்டப் பேரவையில் 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | தமிழக அரசின் 2018-19 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் மார்ச் 15-ம் தேதி துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக் கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 8-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது முதல் உரையை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 4 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தது. அதன்பின், சட்டப் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக் கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை அரங்கில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 10.30 மணிக்கு 2018-19 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கை அளிக்கப்படும்'' என்று கூறப் பட்டுள்ளது. பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில் பட்ஜெட் மீது எத்தனை நாள் விவாதம் நடத்துவது, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராக கே.பழனிசாமி பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட், கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் 16 வகையான இலவச பொருட்கள் திட்டத்துக் கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டது. மேலும், மீனவர்களுக்கான உதவித் தொகை, டீசல் அளவு உயர்வு ஆகியவற்றுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதத்துடன் பேரவைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, துறைவாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி தொடங்கிய பேரவைக் கூட்டத் தொடர், ஜூலை 19-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்பின், சட்டப்பேரவையின் அந்த ஆண்டுக் கான கூட்டத்தை முடித்து வைப்பதாக அக்டோபரில் ஆளுநர் அறிவித்தார். வழக்கமாக, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தும் மாநில அரசின் பட்ஜெட் தாக் கல் செய்யப்படும். மத்திய அர சின் பட்ஜெட், கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி இறுதியில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்பட்டது. தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஆகியவற்றில் முடிவுகள் தெரியவில்லை. மேலும், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியானது. இதுபோன்ற காரணங்களால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான அறிவிப்பு தாமதமானது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க மார்ச் 9-ம் தேதி, 4 மாநில அதிகாரிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. அத்துடன் மார்ச் 31-ம் தேதிக்குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப் பட்டது. கடந்த 2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அப் போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது 2-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டைப்போல அல்லாமல் இந்த ஆண்டு பட்ஜெட் விவாதத்தைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களை கவரும் அறிவிப்புகள்? அதிமுகவின் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில், படிப்படியாக பூரண மதுவிலக்கு விஷயத்தில் ஆயிரம் கடைகள் மட்டுமே தற் போது வரை குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மகளிருக்கான இருசக்கர வாகன மானியத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இலவச கைபேசி திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால் மக்களை கவரும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இருக்கும் என கூறப்படுகிறது.

Comments