Featured Post

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது 2 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் அரசு உதவி பெறும் பள்ளி நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மாதனூரி்ல் உள்ள அரசு உதவிபெறும் தாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், கிளார்க், அலுவலக உதவியாளர், இரவுநேர காவலாளி ஆகிய பணியிடங்களுக்கு கோபி, ரஞ்சனி, யோகநாதன், சாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்காததால் 4 பேரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால் இவர்கள் 4 பேரும் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், மனுதாரர்களின் நியமனத்துக்கு தமிழக அரசு 2 வாரத்துக்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டார்.

Comments