Featured Post

சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை இந்திய மருத்துவம், ஹோமியோபதி அதிகாரிகள் தகவல்.விண்ணப்பிக்க 3 நாட்களே அவகாசம்.


விண்ணப்பிக்க 3 நாட்களே அவகாசம் சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை இந்திய மருத்துவம், ஹோமியோபதி அதிகாரிகள் தகவல் | நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டே அறிவித்தி ருந்தது. அதனை நினைவுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ``இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புவோர் வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். நீட் தேர்வில் தகுதிப் பெறுபவர்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், "இந்திய மருத்துவ முறையில் உள்ள சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். அந்த மருத்துவத்தை தமிழ் தெரிந்த மாணவர்கள் மட்டுமே எளிதில் கற்றுக்கொள்ள முடியும். எனவே, இந்த ஆண்டு இந்திய முறை மருத்துவப் படிப்பு களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனு மதிக்க வேண்டும்" என்று தெரவிக்கப்பட்டது. தமிழக அரசின் கடிதத்துக்கு எந்த பதிலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு வரும் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த ஆண்டே மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துவிட்டது. மீண்டும் வந்து விலக்கு கேட்டால், அது எப்படி முடியும் என்று சொல்கின்றனர். அவர்கள் சொல்வதை பார்த்தால், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதனால் இன்னும் 3 நாட்களே இருப்பதால் மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது" என்றனர்.

Comments