Featured Post

Aadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு


வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு | ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது. ஆதாரை இணைப்பதற்கான மார்ச் 31-ம் தேதி காலக் கெடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குகளில், ஆதார் திட்டம் தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா, தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையா என் பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் தனிநபர் சுதந்திரம் என் பது அடிப்படை உரிமையா என் பது பற்றி முடிவெடுத்தால் மட்டுமே ஆதார் வழக்கை மேலும் விசாரிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையா என்பது குறித்து விசாரிக்க 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ் டில் வழங்கிய தீர்ப்பில், தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமை தான் என்று தீர்ப்பளித்தது. தற்போது சமூக நலத் திட்டங்கள், சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே கடந்த ஆண்டு ஜூனில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வங்கிக் கணக்கு, மொபைல் போன் சேவைகளைப் பெற டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு முன்பு ஆதார் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி புதிய மனு வை தாக்கல் செய்தார். அதில், வங்கிக் கணக்கு, மொபைல் போனுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதியுடன் முடிகிறது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க அரசு தயாராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், "நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை யின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் மாநிலங்களவை கூறிய திருத்தங்கள் எதுவும் ஆதார் மசோதாவில் சேர்க்கப்படவில் லை. ஆதார் மசோதாவை பண மசோதாவாக நிறைவேற்றியது சட்டவிரோதம்" என்று தெரிவிக் கப்பட்டது. ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் வாதாடியபோது, "பாஸ்போர்ட்டுக்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுகிறது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது" என்று குற்றம்சாட்டினார். இதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதிலளித்தபோது, "உச்ச நீதிமன்றத் தின் உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. தட்கல் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்தவே ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் கூறியதாவது: அரசு சேவைகளோடு ஆதார் எண் ணை இணைக்கும் காலக்கெடு மார்ச் 31-ம் தேதி முடிகிறது. இந்த காலக்கெடுவை கடைசி நேரத் தில் நீட்டித்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். வங்கிகள், பங்குச் சந்தையில் பெரும் குழப்பங்கள் உருவாகும். எனவே ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண் ணை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான மார்ச் 31-ம் தேதி காலக்கெடு ரத்து செய்யப்படுகிறது. தட்கல் பாஸ்போர்ட்டுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது. எனினும் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், நேரடி மானியங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு காலக்கெடு ரத்து உத்தரவு பொருந்தாது. இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர். நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் உட்பட எந்த நுழைவுத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments