அரசு கல்லூரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் உள்ள முன் னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், எஸ்.சி. (அருந்ததியர்), (ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை) ஒதுக்கீட்டில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோரும் விண்ணப்பிக்கலாம். வயது, ஜாதி மற்றும் கல்விச் சான்றிதழ்களோடு அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு கல்லூரி முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் பகுதி, சென்னை என்ற முகவரிக்கு 27.3.18 மாலை 3 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Comments
Post a Comment