எம்பிபிஎஸ்(MBBS): 400 கூடுதல் இடங்களுக்கான சேர்க்கை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் கூடுதலாக 400 இடங்களுக்கான சேர்க்கை அனுமதி விண்ணப்பங்களை அகில இந்திய மருத்துவ கவுன்சில் நிராகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 இடங்களும், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,000 இடங்களும் உள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு, தனியார் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து இடங்களும் "நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து மருத்துவப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. Kaninikkalvi இதனால் தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தற்போதுள்ள இடங்களைவிட கூடுதலாக 400 இடங்களுக்கு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக 4 மருத்துவக் கல்லூரிகளிலும் ரூ. 440 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் கடந்த 2016-இல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2017-18 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 400 கூடுதல் இடங்களுக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 4 கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அகில இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர், Kaninikkalvi கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் மதுரை, திருநெல்வேலி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 2018-19 ஆண்டுக்கான கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மீண்டும் இந்த ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் மாதங்கள் கடந்தும் கூடுதல் இடங்களுக்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த இடங்களுக்கே சேர்க்கை அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் கூறும்போது, அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் விடுதி வசதிகள், விரிவுரையாளர் கூடங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்பட பல்வேறு நிபந்தனைகள் தெளிவாக வரையுறுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி அளிப்பதில்லை என்றனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகளைவிட ஏறக்குறைய இரு மடங்கு வசதிகள் தேவைப்படும். இவற்றை நிறைவேற்ற வேண்டுமானால் ரூ. 400 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு செலவாகும் தொகையில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்குகின்றன. அதன்படி பார்த்தால் தமிழக அரசு ரூ.150 கோடிக்கு மேல் ஒதுக்க வேண்டும். ஆனால் தற்போது நிதி நெருக்கடியில் இந்தத் தொகையை அரசால் ஒதுக்க முடியவில்லை. இதனால் கல்லூரிகள் கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. Kaninikkalvi தற்போது மதுரை , திருநெவேலி மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் முதற்கட்ட நிதியாக ரூ. 20 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைக் கொண்டு கட்டடப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து முழுவதும் நிதி ஒதுக்கி பணிகளை முடுக்கிவிட்டால் மட்டுமே அடுத்த ஆண்டாவது கூடுதல் இடங்களை பெற முடியும் என்றனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறும்போது, தற்போது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதனால் 2019-20-இல் மருத்துவ மாணவர் சேர்க்கை கூடுதலாக்கப்படும் என்றனர்.

Comments