ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 11.07.2018 முதல் 25.07.2018 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAM), SEPTEMBER 2018 செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள தமிழ் நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் செய்திக் குறிப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் : 1. அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வி (இ2) துறை, நாள் 11.10.91ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள். 2. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கும் மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய்த் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும். 3. தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய் சான்றிதழினை இணைத்து தேர்வுக் கட்டணம் ரூ.5/- மற்றும் சேவைக் கட்டணம் ரூ.5/- ஆக மொத்தம் ரூ.10/-ஐ Online மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமையாசிரியர் மூலம் உரிய முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்துதல் வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 11.07.2018 முதல் 25.07.2018 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவியர்கள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும். தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு மை பந்துமுனை பேனாவினை (Black Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பு: நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது. ஓம்/- இயக்குநர்.

Comments