தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

 தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் சிபிஎஸ்இக்கு 4 வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த கொள்கையின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டதாகவும், மொழிபெயர்ப்பில் சரியான விடைகள் இல்லாவிட்டால் ஆங்கில விடைகள் இறுதியானது எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் வாதாடினார். இதையடுத்து, சிபிஎஸ்இ பெரும்பான்மை அடிப்படையில் விடைகளைத் தீர்மானிப்பதாகவும், சர்வாதிகார முறையில் செயல்படுவதாகவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். பீகாரில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். வழக்கு நிலுவையில் இருந்தபோதே தேர்வு முடிவை வெளியிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிய தரவரிசை புதிய தரவரிசை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை அடுத்து தமிழில் நீட் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments