பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான தக்கல் விண்ணப்ப பதிவு

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான மார்ச் பொதுத் தேர்வுகளுக்கும் விண்ணப்ப காலம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தக்கல் விண்ணப்ப பதிவு நடத்த தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வருகிற 21,22-ந் தேதிகளில் இந்த தக்கல் விண்ணப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்விமாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு சேவை மையங்களில் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Comments